பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்ல மிதவை சைக்கிள்; இரட்டை சகோதரர்கள் கண்டுபிடிப்பு


பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்ல மிதவை சைக்கிள்; இரட்டை சகோதரர்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 4:45 PM GMT (Updated: 2020-09-25T22:06:30+05:30)

பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்ல கீழக்கரையை சேர்ந்த இரட்டையர்கள் மிதவை சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர்.

கீழக்கரை, 

கீழக்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் அசாருதீன், நசுருதீன். இரட்டையர்களான இவர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காலங்களில் இறந்தவர்களின் உடல்களை மத நல்லிணக்கத்தோடு தாங்களாக முன்வந்து அடக்கம் செய்துள்ளனர். இவர்கள் தற்போது பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தண்ணீரில் மிதக்கும் மிதவை சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

தண்ணீர் கேன் கொண்டு உருவாக்கிய இந்த மிதவை சைக்கிள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.இந்த மிதவை சைக்கிளில் 180 கிலோ எடை வரை ஏற்றி செல்லலாம். இதனை கடல் மற்றும் குளங்களில் மூழ்குபவர்களை தற்காலிகமாக மீட்கும் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மிதவை சைக்கிளை கீழக்கரை கடற்கரையில் மிதக்க வைத்து சோதனை செய்யப்பட்டது.

இந்த சைக்கிள் குறைந்தது 3 பேர் செல்லும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மிதவை சைக்கிள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்வத்துடன் இதனை பொதுமக்கள் பார்த்து அசாருதீன், நசுருதீன் ஆகியோரை பாராட்டி வருகின்றனர்.

Next Story