பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு: கொரோனா பரவல் முடிந்துவிட்டதா? சஞ்சய் ராவத் கேள்வி
பீகார் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் தற்போது முடிந்துவிட்டதா என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
பீகார் மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அங்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “கொரோனா வைரஸ் நோய் நாட்டை வரலாறு காணாத மோசமான சூழ்நிலைக்கு தள்ளி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது முடிந்துவிட்டதா? இதுபோன்ற சூழ்நிலை தேர்தலுக்கு உகந்ததா?
வேளாண் மசோதாக்கள் நிறைவெற்றப்பட்டது பீகார் தேர்தலில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சாதி மற்றும் மத அடிப்படையிலேயே அங்கு ஓட்டுகள் விழுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சுஷாந்த் சிங் மரணம் பீகாரில் தேர்தல் பிரச்சினையாக மாறுமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “வளர்ச்சி குறித்தோ அல்லது ஆளுமை திறன் குறித்தோ பேசுவதற்கு அங்குள்ள அரசிடம் ஒன்றும் இல்லை. சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணையில் என்ன நடத்துவிட்டது?” என்றார்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் மிகப்பெரிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இது ஒரு நல்ல திட்டம். பொழுதுபோக்கு வணிகம் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. எல்லா மாநிலங்களிலும் திரைப்பட நகரங்கள் வர வேண்டும்.
காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்வதால் அங்கும் ஒரு திரைப்பட நகரம் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

Related Tags :
Next Story