வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்
வேளாண் மசோதாக்களை கண்டித்து சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களை கண்டித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் நேற்று சென்னை தண்டையார்பேட்டை தபால் நிலையம் எதிரே விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், லோகநாதன் மற்றும் பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் திடீரென தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 130-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.
போரூர் ரவுண்டானா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென் சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் தாம்பரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தமிழக விவசாய சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் எல்லப்பன் தலைமையில் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் தமிழக விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் ஜி.சம்பத் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை சோழவரம் போலீசார் கைது செய்து காரமடையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Related Tags :
Next Story