குன்னம் கிராம மக்கள் சார்பில் தண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி


குன்னம் கிராம மக்கள் சார்பில் தண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி
x
தினத்தந்தி 25 Sep 2020 10:15 PM GMT (Updated: 26 Sep 2020 1:42 AM GMT)

தண்ணீர் கேட்டு குன்னம் கிராம மக்கள் சார்பில் வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

குன்னம், 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராம மக்களுக்கு தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக வேப்பூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலமாக குன்னம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஆழ்குழாய் கிணறு அமைக்க போர்வெல் எந்திரம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அதற்கு வெண்மணி கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் குன்னம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் நேற்று வெண்மணி கிராம பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில், வெண்மணி கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் ஆடம்பரத்திற்காக தண்ணீர் கேட்கவில்லை உயிர்வாழத்தான் கேட்கிறோம். நாங்கள் பிழைப்பிற்காக தண்ணீர் கேட்கவில்லை. எங்கள் உயிர் பிழைக்க கேட்கிறோம், என்ற உருக்கமான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த சுவரொட்டி ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. இதனால் வெண்மணி கிராம மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story