தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Sept 2020 3:30 AM IST (Updated: 26 Sept 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாயில்பட்டி,

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கலைஞர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே அப்பகுதி மக்கள் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வலியுறுத்தி தாயில்பட்டிலிருந்து கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் கலைஞர் காலனி பஸ் நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சந்தானம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கலைஞர் காலனியில் உள்ள 4 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தாயில்பட்டி ஊராட்சி மூலமாக 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story