குடியாத்தம், ஜோலார்பேட்டையில் உளவுத்துறை பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேருக்கு கொரோனா


குடியாத்தம், ஜோலார்பேட்டையில் உளவுத்துறை பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Sept 2020 11:00 AM IST (Updated: 26 Sept 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம், ஜோலார்பேட்டை பகுதியில் உளவுத்துறை பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த 46 வயது பெண் திருப்பத்தூர் பகுதியில் உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 34 வயதுடைய போலீஸ்காரர் மற்றும் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 52 வயதுடைய மகளிர் பிரிவு ஊர் நல அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த முதியவர், அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர், ஜே.என்.ஆர். நகரை சேர்ந்த வாலிபர், சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை, இடையம்பட்டி பகுதியை சேர்ந்த பெண், சின்ன கூத்தாண்டவர்குப்பத்தை சேர்ந்த வாலிபர், ஏலகிரி மலையில் உள்ள தாயலூர் கிராமத்தைச் சேர்ந்த 2 மூதாட்டிகள், சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்த ஆண், காவேரி பட்டு பகுதியை சார்ந்த முதியவர், சின்னமூக்கனூரை சேர்ந்த 37 வயது ஆண், புள்ளானேரி பகுதியை சேர்ந்த பெண், சகாய நகர் பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் கருப்பனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வாலிபர் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

குடியாத்தம் தாலுகாவில் நேற்று வந்த கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகளில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் 2 பெண் ஊழியர்கள், சந்தப்பேட்டையில் ஒருவர், அம்பாபுரத்தில் ஒருவர், அசோக்நகரில் 2 பேர், தங்கம்நகரில் 2 பேர், பாண்டியன்நகரில் ஒருவர், சேங்குன்றத்தில் 2 பேர், வி.மோட்டூரில் ஒருவர், புட்டவாரிபள்ளியில் ஒருவர், முக்குன்றத்தில் ஒருவர், செட்டிக்குப்பத்தில் ஒருவர், நத்தமேட்டில் ஒருவர், பட்டுவாம்பட்டியில் ஒருவர், காக்க தோப்பில் ஒருவர் என 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ குழுவினர் குடியாத்தம் மற்றும் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story