திருச்செந்தூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
திருச்செந்தூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜ் வரவேற்று பேசினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நவீன மயமாக்கப்பட்ட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழு மற்றும் விவசாய கூட்டு பொறுப்புக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
விழாவில் சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மண்டல இணை பதிவாளர் ரவிச்சந்திரன், துணை பதிவாளர் வளர்மதி, வங்கி செயலாளர் ஜெயந்தி, திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலைபாண்டியன், துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, நகர செயலாளர் மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் ககாரின் ஜெயசீலன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story