ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலக பயன்பாட்டுக்கு புதிய வாகனங்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலக பயன்பாட்டுக்கு புதிய வாகனங்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 27 Sept 2020 4:15 AM IST (Updated: 27 Sept 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலக பயன்பாட்டுக்கு புதிய வாகனங்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்குதல், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறையில் அம்மா நகரும் ரேஷன்கடைகளை தொடங்கி வைத்தல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சா.திருகுணஅய்யப்பதுரை வரவேற்றார். கூடுதல் கலெக்டர் உமா, உதவி கலெக்டர் இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட கற்பக கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் சுமைதாங்கி சி.ஏழுமலை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.ஜெயபிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி, அம்மா நடமாடும் ரேஷன்கடைக்கான 3 புதிய வாகனங்கள், வருவாய்த் துறை அலுவலக பயன்பாட்டுக்கு 11 வாகனங்களை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story