சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2020 4:30 AM IST (Updated: 27 Sept 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் 124 சத்துணவு அமைப்பாளர், 241 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கடந்த மாதம் 31-ந்தேதி 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருந்தால் போதுமானது. 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். சமையல் உதவியாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும், 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குட்பட்டு வசிப்பவராக இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் கல்வி, இருப்பிடம், சாதி, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் இதர முன்னுரிமைக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Next Story