பா.ஜனதா தேசிய செயலாளர்களாக பங்கஜா முண்டே, வினோத் தாவ்டே நியமனம் பூனம் மகாஜன் பதவி பறிப்பு


பா.ஜனதா தேசிய செயலாளர்களாக பங்கஜா முண்டே, வினோத் தாவ்டே நியமனம் பூனம் மகாஜன் பதவி பறிப்பு
x
தினத்தந்தி 27 Sept 2020 5:32 AM IST (Updated: 27 Sept 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா தேசிய செயலாளர்களாக மராட்டியத்தை சேர்ந்த பங்கஜா முண்டே, வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தேசிய அளவில் புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் மராட்டியத்தில் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளும், முன்னாள் மாநில மந்திரியுமான பங்கஜா முண்டே மற்றும் முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே, சுனில் தேவ்தர், விஜயா ரகத்கர் ஆகியோர் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மும்பையை சேர்ந்த வி.சதீஷ் தேசிய இணை பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தேசிய சிறுபான்மை பிரிவு தலைவராக மாநிலத்தை சேர்ந்த ஜமால் சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மராட்டியத்தை சேர்ந்த யாருக்கும் தேசிய துணை தலைவர், தேசிய பொது செயலாளர் பதவிகள் வழங்கப்படவில்லை.

இதேபோல தேசிய இளைஞர் அணி தலைவராக இருந்த மும்பையை சேர்ந்த எம்.பி.யும்., மறைந்த பாரதீய ஜனதா தலைவர் பிரமோத் மகாஜனின் மகளுமான பூனம் மகாஜனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா புதிய தேசிய இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story