பணிகள் நடப்பதில் சிக்கல் இல்லை: ரிங்ரோடு நில உரிமையாளர்களுக்கு கோர்ட்டு மூலம் இழப்பீடு தொகை - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்


பணிகள் நடப்பதில் சிக்கல் இல்லை: ரிங்ரோடு நில உரிமையாளர்களுக்கு கோர்ட்டு மூலம் இழப்பீடு தொகை - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2020 5:32 AM IST (Updated: 27 Sept 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

பணிகள் நடப்பதில் சிக்கல் இல்லை ரிங்ரோடு நில உரிமையாளர்களுக்கு கோர்ட்டு மூலம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, 

ரிங்ரோடு பணிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் 5 இடங்களில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் உள்ள சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் 1 கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே நில உரிமையாளர்கள் வழக்கு போட்டு இருந்தனர். இந்த வழக்குகள் அனைத்துக்கும் கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் உதவி பொறியாளர் ஆர்.அரவிந்த் கூறியதாவது:-

புத்தூர் புதுப்பாளைம் கிராம பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் அவர்களுக்கு உரிய தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டு விட்டது. இந்த தகவலை 24-ந் தேதி நில உரிமையாளர்களுக்கு தெரிவித்து விட்டோம். எனவே தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. பணிகள் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இனிமேல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று சம்பந்தப்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் சமப்படுத்தும் பணிகள் நடந்தன.

Next Story