2-வது நாளாக அதிரடி சோதனை குடோனில் பதுக்கிய 118 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது


2-வது நாளாக அதிரடி சோதனை குடோனில் பதுக்கிய 118 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2020 3:45 AM IST (Updated: 27 Sept 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடோனில் பதுக்கிய 118 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கோவை,

கோவையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி 2-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 750 கிலோ குட்கா, புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து கோவையில் 2-வது நாளாக நகரின் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கோவை கடைவீதி ராமர் கோவில் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 118 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக சுல்தான்சிங் (வயது 32), பூரம் ராம் (22) ஆகிய 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story