குன்னத்தில் லாரி மோதி, வாலிபர் தலை நசுங்கி பலி ஹெல்மெட் அணிந்தும் பயனில்லை


குன்னத்தில் லாரி மோதி, வாலிபர் தலை நசுங்கி பலி ஹெல்மெட் அணிந்தும் பயனில்லை
x
தினத்தந்தி 27 Sep 2020 9:14 AM GMT (Updated: 27 Sep 2020 9:14 AM GMT)

குன்னத்தில் லாரி மோதியதில் ஹெல்மெட் அணிந்தும் பயனில்லாமல் வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சடைக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 25). இவர் பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் சடைக்கன்பட்டி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். குன்னம் கிராமத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனையகம் அருகே வந்தபோது, மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பால் ஏற்றி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ராஜ்குமாரின் தலையில் லாரியின் சக்கரம் ஏறியது.

சாவு

இதில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் உடைந்து நொறுங்கி, ராஜ்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் அங்கு சென்று, ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த நல்லதம்பியை(53) கைது செய்தனர்.

Next Story