மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் அரிவாள்மனையால் மனைவியை வெட்டிக்கொன்ற விவசாயி கைது + "||" + Farmer arrested for cutting his wife with a scythe in a family dispute

குடும்பத்தகராறில் அரிவாள்மனையால் மனைவியை வெட்டிக்கொன்ற விவசாயி கைது

குடும்பத்தகராறில் அரிவாள்மனையால் மனைவியை வெட்டிக்கொன்ற விவசாயி கைது
செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள பாகசாலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆலவேலி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 40). விவசாயியான இவருடைய மனைவி உமாராணி(35). இவர், மகளிர் குழுவில் கடன் வாங்கி வீட்டு செலவுக்கு பயன்படுத்தினார். சம்பவத்தன்று சிவக்குமார் தனது மனைவி உமாராணியிடம் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது உமாராணி பணம் கொடுக்க மறுத்தார்.


இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மனைவி உமாராணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிதாப சாவு

இது குறித்து பாகசாலை போலீசார் சிவக்குமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உமாராணி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாகசாலை போலீசார், முன்பு பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட உமாராணிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழி அருகே தாயை கொன்று வீட்டின் முன்பு புதைத்த தொழிலாளி கைது
சீர்காழி அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தன்னை பெற்ற தாயை கொன்று வீட்டின் முன்பு புதைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
2. மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய கார் டிரைவர் கைது
மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய வாடகை கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது
ஆண்டிமடம் அருகே விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
4. விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 50 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.
5. குடிபோதையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை நாடகமாடிய மகன் கைது
பாகல்கோட்டை அருகே குடிபோதையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டார். நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.