மத்தூர் ஒன்றியத்தில் ரூ.96 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு


மத்தூர் ஒன்றியத்தில் ரூ.96 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 28 Sep 2020 2:52 AM GMT (Updated: 28 Sep 2020 2:52 AM GMT)

மத்தூர் ஒன்றியத்தில் ரூ.96 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் ரூ.95 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் கணேஷ், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் இலக்கியா, சாஸ்தா, களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணை தலைவர் தமிழ்ச்செல்வி கருணாநிதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மத்தூர் ஒன்றியம் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2017-18-ம் ஆண்டிற்கான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் ரூ.70.75 லட்சம் மதிப்பில் கட்டும் பணி, களர்பதி ஊராட்சியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதியின் கீழ் ரூ.10.98 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து களர்பதி ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் மலையாண்டஅள்ளி முதல் மோட்டூர் சாலை வரை ரூ.9 லட்சத்து 65 ஆயிரத்து 300 மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுற்றுச்சுவர்

தொடர்ந்து எம்.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 69 மீட்டர் நீளத்திற்கு ரூ.4 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Next Story