சேலம் அருகே ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது
சேலம் அருகே ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
சேலம்,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). டேங்கர் லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (30). கிளீனர். இவர்கள் இருவரும் சென்னை துறைமுகத்தில் இருந்து டேங்கர் லாரியில் ஆயில் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்றுகொண்டிருந்தனர். லாரியை டிரைவர் பாலாஜி ஓட்டி வந்தார்.
நேற்று மதியம் 2 மணியளவில் டேங்கர் லாரி சேலம் உடையாப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.
கவிழ்ந்தது
பின்னர் திடீரென்று சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்த ஆயில் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நுரை கலவையை பீய்ச்சி அடித்து தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம் சாலையின் நடுவில் கிடந்த டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்தில் காயமடைந்த டிரைவர் பாலாஜி, கிளீனர் நவீன்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story