செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற கோரி நடந்தது

நாடு முழுவதும் கொண்டு வந்துள்ள விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு,
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங் களை திரும்ப பெறக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் அன்பு செல்வன், ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்பாட் டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி, திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க., நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் அதற்கு துணைபோகும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை சிக்னல் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை தாங்கினார். நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் லோகநாதன், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் அருகில் தி.மு.க. சார்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் வெ.விசுவநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நகர தலைவர் டி.புனிதவேல், ம.தி.மு.க. நகர செயலாளர் வி.பாபு, வி.சி.க. நகர தலைவர் அய்யப்பன், இ.கம்யூனிஸ்டு நிர்வாகி ஜெகதீசன், தி.மு.க. இளைஞரணி நிர்வாகி வி.வி.என்.மோகன்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய செயலாளரும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான இதயவர்மன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் திரு வள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவு தந்த அ.தி. மு.க. அரசை கண்டித்தும், திருவள்ளூர் நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வி.ஜி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் டி.கே.பாபு, காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நகர தலைவர் சி.பி.மோகன்தாஸ், சிறுபான்மை பிரிவு தலைவர் வெங்கடேஷ், விவசாய பிரிவு தலைவர் அருள், வக்கீல் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதேபோல திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஜார் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.வின் மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் தலைமை தாங்கினார். கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ராஜ்குமார், ஈசன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மீஞ்சூர் பஜாரில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மணி, பாஸ்கர்சுந்தரம், அத்திப்பட்டு ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சியை சார்ந்த அத்திப்பட்டு துரைக்கண்ணு, விடுதலை சிறுத்தை கட்சியின் ஏழுமலைவாசன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விஜயன், பாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் சோழவரம் வடக்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பகலவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தயாளன், கோவிந்தராஜ், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சந்தானம், ம.தி.மு.க.வின் சுல்தான், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீத்தஞ்சேரியில் கண்டன ஆர்பாட்டத்தில் பூண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் டீ.கே.சந்திரசேகர் தலைமை தாங்கினார். அதில் ஒன்றிய அமைப்பாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் நாகராஜ், சிவய்யா, வக்கீல் வெஸ்லி, ராகவன்,
காங்கிரஸ் கட்சியின் வக்கீல் பிரிவு மாநில துணை தலைவர் அருண்பிரசாத், விடுதலை சிறுத்தை கட்சியின் இனியன்பஞ்சா, ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அப்துல்ரஷீத், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சம்சூத்தின், நிர்வாகி காதர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணைத்தலைவர் சி.எச்.சேகர், மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா உள்பட அனைத்து கட்சிகளையும் சேர்த்து 300 பேர் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story