வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி திருவாரூரில், தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் - பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி திருவாரூரில், தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் - பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Sept 2020 3:45 AM IST (Updated: 29 Sept 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டனர்.

திருவாரூர், 

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் மன்னை மதியழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், தி.க. மாவட்ட தலைவர் மோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜ்புர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதா விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இந்த சட்டத்தின் மூலம் மாநில உரிமைகள் மத்திய அரசு தலையிடுவதாகவும், எதிர்காலத்தில் வேளாண்மை உற்பத்தி பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படும். எனவே இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story