வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக்கோரி 40 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 40 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வணிக ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த சாகுபடி சட்டம் ஆகிய 3 சட்டங் களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரகுமார், திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சொக்காரவி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயனுல்ஆபிதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் பாதுசா மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர தி.மு.க. துணைச் செயலாளர் நீலகண்டன் நன்றி கூறினார். தஞ்சை மாவட்டத்தில் வல்லம், கள்ளப்பெரம்பூர், ஒரத்தநாடு, கும்பகோணம் உள்பட 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாராசுரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ.வும், திருவிடைமருதூரில் கோவி.செழியன் எம்.எல்.ஏ.வும், ஒரத்தநாடு மேலஉளூரில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றனர்.
செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வீரமணி, தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வல்லம் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி தலைமை தாங்கினார். வல்லம் தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி தபால் நிலையம் எதிரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பூதலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். காங்கிரஸ் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பூதலூர் வடக்குஒன்றிய செயலாளர் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் துரைராஜ், இந்திய ஜனநாயக கட்சி பூதலூர் ஒன்றிய தலைவர் திருமாறன், மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story