மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சேலம்,
விவசாயிகள், சிறு வணிகர்கள், விவசாய தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதா வுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்த 3 மசோதாக்களுக்கும் சட்ட அந்தஸ்து கிடைத்துள்ளது.
இந்த நிலையில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. அதன்படி மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி., மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் கலைய முதன், பொருளாளர் சுபாஷ், மாநகரச் செயலாளர் ஜெயக் குமார், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக் கண்ணன், வக்கீல் அண்ணாமலை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயபிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், கம்யூனிஸ்டு கட்சிகளின் நிர்வாகிகள் மோகன், ராமமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தங்கவேல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சந்திரன் உள்பட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் சமூக இடைவெளியுடன் நின்று விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் பாதிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கொண்டலாம் பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப் பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் எடப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
முன்னதாக எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் பாஷா வரவேற்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அய்யாவு, கொங்கு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் லோகநாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது ரைஸ், எடப்பாடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசோக் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன், நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் நாகராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் தங்களது கைகளில் கரும்பு, கடலை செடி, பருத்தி செடி, வாழை மர இலைகளை பிடித்தவாறு பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆட்டையாம் பட்டியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார்.
இதில் ஆட்டையாம்பட்டி பேரூர் தி.மு.க. செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான முருக பிரகாஷ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அந்தோணி சாமி மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி, மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கோபால் ராசு, மாவட்ட திராவிடர் கழக தலைவர் வானவில், தி.மு.க. நகர செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர் பாளர் நாராயணன், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் கமால் பாஷா, ஸ்டாலின், காசியம்மாள் மற்றும் மாணிக்கம், முல்லை பன்னீர் செல்வம், சம்பத், பர்கத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story