தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி - கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. பேச்சு
தமிழகத்தில் பெரும்பான்மையுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி.பேசினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க. அரசையும், ஆதரித்த அ.தி.மு.க. அரசையும் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், ஐ.ஜே.கே.கட்சி நிர்வாகி பழனிசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் லியாகத்அலி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கவுதமசிகாமணி எம்.பி. பேசியதாவது:-
பா.ஜ.க. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டம் மிக மிக மோசமானதாகும். ஓட்டெடுப்பு நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருப்பது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும். இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள 80 சதவீத விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு பாதிப்புதான் ஏற்படும். முழுக்க, முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் இந்த சட்டம் பயன் அளிக்கும். அதனால்தான் இந்த சட்டத்தை எதிர்த்து அனைத்து ஊர்களிலும் தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. விவசாயிகளுக்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எத்தனை போராட்டங்கள் வேண்டுமென்றாலும் நடத்த தயாராக உள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி பாசறைபாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அப்பாவு, தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் வக்கில் செல்வநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சண்முகம், காமராஜ், ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் முரளி, நகர துணை செயலாளர் அபுபக்கர், நிர்வாகி சித்தார்த்தன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சங்கராபுரம் பஸ்நிலையம் அருகில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயசூரியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கமருதீன், நாகராஜன், வக்கீல் பாலஅண்ணாமலை, மாநில முன்னாள் இளைஞரணி துணை செயலாளர் தயாளமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் குமார் வரவேற்றார்.
இதில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாறன், திராவிடர் கழகம் சுப்பராயன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட செயலாளர் ரஷீத்கான், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, ம.தி.மு.க மாவட்ட தலைவர் சவுக்கத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் நவாப்ஜான் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் முருகன், தயாளன், செங்குட்டுவன், ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தியாகதுருகம் தெற்கு மற்றும் வடக்கு பேரூர் தி.மு.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நகர செயலாளர் பொன்.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர் கே.கே.அண்ணாதுரை, தி.மு.க. பிரமுகரும், மவுண்ட் பார்க் பள்ளி தாளாளருமான மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் கொளஞ்சியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு நிர்வாகி பெரியசாமி, ஐ.ஜே.கே. ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வேலாயுதம், நகர காங்கிரஸ் தலைவர் கபீர் பாஷா, ஐ.ஜே.கே. நகர தலைவர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கலையமுதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முரசொலிமாறன், மலை அரசன், சுப்பு இளங்கோவன், பராசக்தி, தாமோதரன், சிலம்பரசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மடம்பெருமாள் நன்றி கூறினார்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நி.பாண்டுரங்கன், எம்.பெருமாள் ஆகியோர் தலைமையில் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அமிர்தவள்ளி கோவிந்தராஜ், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்பாராசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சின்னசேலம் வடக்கு ஒன்றியம், நகர தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அன்புமணி மாறன், நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பி.என்.பி. செல்வராஜ், தி.மு.க. நிர்வாகிகள் அருள்மொழி, பொன் ராமலிங்கம், திராவிடமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கோவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கலியன், விவசாய அணி முன்னாள் அமைப்பாளர் மணி, கொங்கு மக்கள் கட்சி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பழனி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சக்திவேல், ம.தி.மு.க. வசந்த சுந்தரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story