சி.எம்.டி.ஏ. அலுவல் குழு கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


சி.எம்.டி.ஏ. அலுவல் குழு கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 1 Oct 2020 5:30 AM IST (Updated: 1 Oct 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

சி.எம்.டி.ஏ. அலுவல் குழு கூட்டம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

சென்னை,

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) 265-வது அலுவல் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துணை முதல்-அமைச்சரும், சி.எம்.டி.ஏ. தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன், நிதித்துறை அரசு சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, தொழில்துறை கூடுதல் செயலாளர் எ.சுந்தரவள்ளி, நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.முருகேஷ், போக்குவரத்து துறை துணை செயலாளர் பெ.பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னையில் செயல்படுத்த இருக்கும் வளர்ச்சித்திட்டங்கள், முடிக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Next Story