முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரே வாரத்தில் 8 போலீசாருக்கு கொரோனா


முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரே வாரத்தில் 8 போலீசாருக்கு கொரோனா
x

முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரே வாரத்தில் 8 போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆவடி,

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போலீஸ் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்த 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், டிரைவர், 2 போலீஸ் ஏட்டுகள் மற்றும் 2 பெண் போலீசார் என 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மற்ற போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது போலீஸ் ரோந்து ஜீப், செயல்படாமல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கிருமி நாசினி கொண்டு அதை கழுவி சுத்தம் செய்த பிறகே மீண்டும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதனால் மற்ற போலீசார் தங்கள் சொந்த வாகனங்களிலேயே ரோந்து சென்று வருகிறார்கள்.

போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் புகார் மனுக்களையும் போலீஸ் நிலையத்துக்கு வெளியே வைத்து போலீசார் வாங்கி விசாரித்து வருகின்றனர்.

Next Story