வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முகமதுஜான் எம்.பி.க்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு
ராணிப்பேட்டை முத்து கடையில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் என்.கே.மணி தலைமை தாங்கினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் முகமதுஜான் எம்.பி. கடந்த சில தினங்களுக்கு முன்பு வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து முகமது ஜான் எம்.பி., தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை திரும்பிய முகமது ஜான் எம்.பிக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை முத்து கடையில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் என்.கே.மணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவி கலந்துகொண்டு முகமது ஜான் எம்.பிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பத் எம்எல்ஏ, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மேல்விஷாரம் நகர செயலாளர் இப்ராகிம் கலிலுல்லா, வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் தமிழரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், அம்மூர் பேரூராட்சி செயலாளர் தினகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.சி.பூங்காவனம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கே.பி சந்தோஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் அகோ. அண்ணாமலை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிசுதீன், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உமர் பாரூக், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அசோகன், மெடிக்கல் வாசுதேவன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் அணிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு எம்.பிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முகம்மது ஜான் எம்.பி. நன்றி தெரிவித்து பேசினார்.
முன்னதாக நேற்று முன்தினம் ராணிப்பேட்டை சர் ஜமாத் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முகமது ஜான் எம்.பி.யை சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Tags :
Next Story