வண்ணாங்குளத்தில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்


வண்ணாங்குளத்தில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Oct 2020 9:50 AM IST (Updated: 1 Oct 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

வண்ணாங்குளத்தில், 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி தர்மராஜா கோவில் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குன்று மேடு பகுதியில் வசிக்கும் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி தர்மராஜா கோவில் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி கோட்ட வருவாய் அலுவலர் மந்தாகினி, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார்.

இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வண்ணாங்குளம் குன்று மேடு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக வீட்டு மனைப் பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும் 120 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இவற்றின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும்.

நிகழ்ச்சியில் மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், வண்ணாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா விக்னேஷ், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி குமார், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் அய்யாசாமி, ஆரணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story