கடன் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது


கடன் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2020 10:45 AM IST (Updated: 1 Oct 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

கடன் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சத்திரமனை காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண் (வயது 28) . டிரைவரான இவர் திருமணமான 27 வயதுடைய பெண் ஒருவரை சந்தித்து கடன் தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தாராம். அதுமட்டுமின்றி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால், அந்த பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக அருண் மிரட்டினாராம்.

இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

Next Story