தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 6:00 PM IST (Updated: 1 Oct 2020 6:00 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லட்சுமணன், ராஜமாணிக்கம், மாணிக்கம், கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பிரதாபன், மாவட்ட துணை தலைவர்கள் முருகேசன், பச்சா கவுண்டர் ராஜி, நிர்வாகிகள் மாதையன், ராமச்சந்திரன், சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

வத்தல்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வத்தல்மலையில் வசிக்கும் அனைத்து பழங்குடியின மக்களையும் ஒருங்கிணைத்து பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story