குத்தாலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்பு


குத்தாலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 3:30 PM GMT (Updated: 1 Oct 2020 3:16 PM GMT)

குத்தாலத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிக்கப்பட்டன.

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் காவல் சரகம் திருவாலங்காடு சோதனைச்சாவடியில் கடந்த மே மாதம் 17-ந் தேதி மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்களை சோதனை சாவடி போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து வேன் டிரைவர் மதுரை ஒத்தக்கடை மேலையூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பூரணஜோதி (வயது32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று கோர்ட்டு உத்தரவுப்படி குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன், பேரூராட்சியின் உணவுத்துறை ஆய்வாளர் ரெங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர் மோகன்தாஸ், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் குத்தாலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அழித்தனர்.

Next Story