2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான அரசு ஆஸ்பத்திரி நர்சு சாவு மந்திரி ஸ்ரீராமுலு இரங்கல்
யாதகிரியில் 2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான அரசு ஆஸ்பத்திரி நர்சு உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு மந்திரி ஸ்ரீராமுலு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
யாதகிரி மாவட்டம் கவுலுரு கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணியாற்றி வந்தவர் கீதா. இவர், கடந்த 12 ஆண்டுகளாக நர்சுவாக பணியாற்றினார். கடந்த 6 மாதங்களாக அவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி கீதாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்காக கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்தில் கீதா குணமடைந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையில், வீட்டுக்கு வந்த கீதாவுக்கு அடுத்த ஓரிரு நாட்களில் கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, கடந்த 29-ந் தேதி அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
நர்சு சாவு
2-வது முறையாக கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், யாதகிரி டவுன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கீதா பரிதாபமாக இறந்து விட்டார். கீதாவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எப்படி? என்பது தெரியவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர், மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பலியான சம்பவம் யாதகிரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நேற்று தனது டுவிட்டர் பதிவில், யாதகிரி அரசு ஆஸ்பத்திரி நர்சு கீதா கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. கொரோனாவுக்கு பலியான நர்சு கீதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

Related Tags :
Next Story