மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார்
மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் பாலியல் பாலத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியாங்கா ஆகியோரை போலீசார் தடுத்து கீழே தள்ளியதுடன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.
புதுவையில் அண்ணாசிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் மக்கள் சுதந்திரமாக பேச முடியவில்லை. அரசியல் கட்சிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சாதாரண நடுத்தர மக்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறார்கள். பா.ஜ.க. பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. அந்த மாநிலங்களில் மக்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை.
பா.ஜ.க. கட்சியினரால் தலித், சிறுபான்மை மற்றும் மலைவாழ் மக்கள் தாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இறைச்சி கொண்டு சென்றால் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். தலித் சமுதாயத்தினர் உரிமைக்காக போராடினால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் இந்தியாவை உலுக்கி உள்ளது. தலித் இனத்தை சேர்ந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை போலீசார் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட அராஜக செயலுக்கு பின்னணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு உள்ளது.
புதுவையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பல்வேறு இடையூறு செய்தனர். இதனை மீறி விதிமுறைகளுக்கு உட்பட்டு உண்ணாவிரதம் நடத்தி உள்ளோம். பிரதமர் மோடி ஹிட்லரை போல் நடந்து வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா, ‘நீட்’ தேர்வு, இந்தி திணிப்பு, மீனவர்கள் பிரச்சினை என மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
மத்திய அரசு மாநிலத்தின் அதிகாரங்களை பறித்து வருகிறது. நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்திற்காகவும், ஜனநாயக உரிமைகளை காக்கவும் மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரதத்தில் அமைச்சர் நமச்சிவாயம், ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மற்றும் காங்கிரஸ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். முடிவில் தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ. (தெற்கு), எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு) ஆகியோர் நிறைவுரையாற்றினார்கள்.

Related Tags :
Next Story