திருப்பூர் பகுதிகளில் காந்திஜெயந்தி விடுமுறையன்றும் களைகட்டிய மது விற்பனை
திருப்பூர் பகுதிகளில் காந்திஜெயந்தி விடுமுறையான நேற்றும் மதுவிற்பனை களை கட்டியது.
திருப்பூர்,
அரசு விடுமுறை நாட்களில், குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. மேலும், மதுவிற்பனையும் அன்று தடை செய்யப்படும். இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும். இதனையும் மீறி மதுவிற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த எச்சரிக்கையையும் மீறி திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்லூர் உள்பட ஏராளமான பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை மதுவிற்பனை களை கட்டியது.
டாஸ்மாக் கடைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் என பல்வேறு பகுதிகளில் பலர் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தனர். குடிமகன்களும் மதுபாட்டில்களை அதிகவிலை கொடுத்து வாங்கி சென்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக திருப்பூர் மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருவதை காண முடிகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வருகிறவர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.

Related Tags :
Next Story