வாணாபுரம், சோமாசிபாடியில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, பிச்சாண்டி பங்கேற்பு
வாணாபுரம், சோமாசிபாடியில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, பிச்சாண்டி கலந்து கொண்டனர்.
வாணாபுரம்,
கொரானா பரவல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்திருந்தார். ஆனால் வாணாபுரம் அருகே உள்ள நாச்சானந்தல் ஊராட்சியில் தடையை மீறி மக்கள் சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க. வினர் கூட்டம் நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சருர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தை திடீரென ஆட்சியாளர்கள் ரத்து செய்கிறார்கள் ஆனால் இங்கு முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்றி கூட்டம் நடத்துகிறோம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கூடியதாகவும் உள்ளது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பயன் பெறுவார்கள். இதனால் விவசாயிகள் முழுவதும் வருமானம் இன்றி கஷ்டப்படும் சூழல் ஏற்படும், மேலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட கூடிய அபாயமும் உள்ளது. என்றார்.
இதில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் மல்லிகா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சியில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தி.மு.க.சார்பில், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, சோமாசிபாடி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் சிவக்குமார், இளம்பரிதி, நகர தி.மு.க.செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
இதில் ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பூமிநாதன், கீழ்பென்னாத்தூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நகர ஒருங்கிணைப்பாளர் சின்னராசு உள்பட பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
இதேபோல் வாணாபுரத்தில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் பரிமளா கலையரசு முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை வரவேற்றார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் ஒன்றியம் கேட்டவரம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கூட்டமும், ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்பட 40 பேர் மீது கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் கெங்கவரம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story