சேதமடைந்த மதகு வழியாக வயல்களில் தண்ணீர் புகுந்ததால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
சேதமடைந்த மதகு வழியாக புகுந்த தண்ணீரால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடவாற்றில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது மீன்சுருட்டி அருகே உள்ள சேதமடைந்த பாண்டியன் ஏரி வடிகால் மதகு கதவணை வழியாக, காட்டகரம் வடக்கு தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள நஞ்சை பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் மேலாக நடவு பணி முடிந்த நிலையில் உள்ள வயல்வெளிகளில் புகுந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. சேதமடைந்த பாண்டியன் ஏரி வடிகால் மதகு வழியாக புகுந்த தண்ணீரால், நடவு செய்த நெல்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. அணைக்கரை கீழணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை 2 ஆயிரத்தில் இருந்து 1,500 கன அடி வீதம் திறந்து விட்டால், காட்டகரம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்கு தண்ணீர் போகாமல் தடுக்க முடியும்.
எனவே உடனடியாக வீராணம் ஏரிக்கு செல்லும் தண்ணீரின் அளவை குறைக்கவும், பாண்டியன் ஏரி வடிகால் மதகு கதவணையை சரி செய்ய வேண்டும் என்றும், தண்ணீர் சூழ்ந்து அழுகிய நிலையில் உள்ள சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story