திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது


திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 4 Oct 2020 3:30 AM IST (Updated: 4 Oct 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது.

ஈரோடு,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான நெல், அரிசி, கோதுமை உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல், மாவட்டத்தில் உள்ள அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக்கப்படும்.

இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான நெல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தனி ரெயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 40-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் டன் நெல்லை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் பெருந்துறை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நெல் அரிசியாக்கப்பட்ட பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story