ஜல்ஜீவன் மேல்நிலை தொட்டிகள் மூலம் ரூ.195 கோடியில் 754 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.195 கோடியில் 754 கிராமங்களில் விரைவில் காவிரி குடிநீர் வழங்க உள்ளோம் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை வகித்தார். இதில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசு திட்டங்களான ஜல் ஜீவன், பசுமை வீடுகள், இந்திரா குடியிருப்பு வீடுகள், 100 நாள் வேலைத்திட்டம், சாலை திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர் மற்றும் நாட்டறம்பள்ளி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும், விரிவாக ஆய்வு செய்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், “திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ‘ஜல்ஜீவன்’ திட்டம் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.34 கோடியே 55 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக10 ஆயிரம்,, 20 ஆயிரம், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அவற்றை விரைந்து முடித்து தர வேண்டும். மாவட்டத்தில் ரூ.300 கோடி செலவில் கிராமங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜல் ஜீவன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை விரைந்து கட்டி முடித்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.195 கோடியில் 50 ஊராட்சிகளில் உள்ள 754 கிராமங்கள் பயன் பெறும்” என்றார். ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வி.மகேஷ்பாபு, செயற்பொறியாளர் எஸ்.ஆறுமுகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆர்.அருண், ஊரக வளர்ச்சி முகமை தணிக்கை மு.பிச்சாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் திட்ட இயக்குனரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ். ஹரிகரன் நன்றி கூறினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் குறைதீர்வு கட்டிடத்தை அமைச்சர் கே.சி. வீரமணி பார்வையிட்டார். அப்போது அ.தி.மு.க. நகரச் செயலாளர் டி.டி.குமார், கந்திலி ஒன்றிய செயலாளர் சி.எம்.மணிகண்டன், ஆர் நாகேந்திரன் உட்பட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story