வேலூர் அரசு மருத்துவமனையில் குப்பை கொட்டும் இடத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணம் போலீசார் விசாரணை


வேலூர் அரசு மருத்துவமனையில் குப்பை கொட்டும் இடத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Oct 2020 9:35 AM IST (Updated: 4 Oct 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அரசு மருத்துவமனையில் குப்பை கொட்டும் இடத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு உள்ள பிரசவ வார்டில் தினமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கிறது.

இந்த நிலையில் பிரசவ வார்டுக்கு அருகிலுள்ள குப்பை கொட்டும் இடத்தில், கடந்த 1-த் தேதி பிறந்து ஒரேநாள் ஆன பச்சிளம் பெண் குழந்தை பிணமாக கிடந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பென்னாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சிளம் குழந்தையை போட்டு சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story