கரூர் எம்.ஜி.ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூர் எம்.ஜி. ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கரூர் செங்குந்தபுரத்தில் இருந்து சேலம் பைபாஸ் செல்லும் சாலையில் எம்.ஜி.ரோடு உள்ளது. இந்த எம்.ஜி.ரோட்டை சுற்றி வீடுகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்தசாலையில் சுற்றியுள்ள வீடுகள், கடைகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவுகள் அனைத்தும் இந்த எம்.ஜி.ரோட்டில் கொட்டப்பட்டு வருகிறது.
இதில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள், வாழை இலைகள், தேங்காய் மட்டைகள், பழைய துணிமணிகள், பஞ்சுகள், பிளாஸ்டிக் பை மூட்டைகள், சாக்கு மூட்டைகளில் துணிமணிகள் உள்ளிட்டவை கிடக்கின்றன. அதேபோல் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை இந்த சாலை ஓரத்தில் வீசி செல்கின்றனர். இந்த குப்பைகள் பல நாட்களாகியும் அள்ளப்படாமல் அப்படியே கிடக்கின்றன.
இந்த குப்பைகள் பல நாட்களாக இருப்பதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும் சமீபகாலமாக மழை பெய்து வருவதால் இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story