கிருஷ்ணகிரியில் இருந்து ஓமலூருக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்- டிரைவர், கிளீனர் கைது


கிருஷ்ணகிரியில் இருந்து ஓமலூருக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்- டிரைவர், கிளீனர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2020 6:45 PM IST (Updated: 4 Oct 2020 6:35 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் இருந்து ஓமலூருக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்காவை காரிமங்கலம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் காரிமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மாவட்ட எல்லையான டீ குண்டு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தவிட்டு மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (வயது 21), கிளீனர் சதீஷ்குமார் (23) என்பதும், சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் வேன் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 65 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வேன் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story