அ.தி.மு.க. பாசறை ஆலோசனை கூட்டம்: இளைஞர், இளம் பெண்கள் அர்ப்பணிப்போடு தேர்தல் பணி செய்ய வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
மேல்மலையனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர், இளம் பெண்கள் அர்ப்பணிப்போடு தேர்தல் பணி செய்திட வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேவனூர், ஏம்பலம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.பி.யும் தெற்கு ஒன்றிய செயலாளருமான செஞ்சி சேவல் ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷரீப், விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ச்சியாக அ.தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர செய்த பெருமை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு ஆர்வத்துடன் வந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், இன்று அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
எனவே தயவு செய்து நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள். கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்த்திய பெருமை இளைஞர்களையே சாரும். இளைஞர்களுக்கு பதவி வழங்கினால் நம்மை மதிக்கமாட்டார்கள் என்று பழைய நிர்வாகிகள் அச்சப்பட வேண்டாம். அனைவருக்கும் தகுதியான பதவிகள் வழங்கப்படும். இந்த இயக்கம் 100 ஆண்டுகள் வளர வேண்டும். ஜெயலலிதா கூறியது போல் இளைஞர்களால் தான் இந்த இயக்கத்தை கொண்டு செல்ல முடியும். இந்தக் கட்சியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இங்கு வந்துள்ள இளைஞர்களுக்கு நான் கூறுகிறேன். நீங்கள் தான் இந்த கட்சியை வழிநடத்தி செல்லேண்டும். தேர்தலையும் சந்திக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்கனவே 50 சதவீத ஒதுக்கீடு உள்ளாட்சியில் வழங்கப்பட்டுவிட்டது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மசோதா உள்ளது. அது விரைவில் சட்டமாக மாறப் போகிறது.
விழுப்புரம் தொகுதி பெண்களுக்கு என்று ஒதுக்கீடு வந்துவிட்டால் நான் வழிவிட்டுவிட்டு, அங்கு யார் நிறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்கு நான் வழி விட வேண்டும். எனவே அதற்கு முன்பாக உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள்.
அ.தி.மு.க வில் இணைந் துள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் முழுமனதோடு, அர்ப்பணிப் போடு தேர்தல் பணியை செய்திட வேண்டும். யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது தி.மு.க வரக்கூடாது என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் சற்குணம், பூங்காவனம், பாண்டியன், ஏகமலை, அன்பரசன், ஒன்றிய நிர்வாகிகள் அன்பழகன் கலைதாசன், ராஜேந்திரன், மணி, செல்வராஜ், கிளை செயலாளர்கள் மாலதி மணி, ராமதாஸ், வளர்மதி, சேகர், பாபு, வெங்கடேசன், குப்பன், ரங்கநாதன், வடிவேல், துரைக்கண்ணு, சேட்டு பாய், நிர்வாகிகள் சுகந்தி, சந்தான கிருஷ்ணன், பழனி, மணி, முருகன், சீனுவாசன், ராஜாராமன், ரமேஷ், தேவராஜ், விஜயா, பிரகாஷ், முரளி, சேகர், சுப்பிரமணி, ரங்கநாதன், ஆனந்தன், சங்கர், ருத்திரமூர்த்தி, சுதாகரன், குமார், பாலச்சந்தர், கார்த்திகைப்பிரியா, வக்கீல் சின்னய்யா வீரப்பன் மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சுகன்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story