லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட அட்டைபெட்டிகள் கார் மீது விழுந்து ஒருவர் பலி


லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட அட்டைபெட்டிகள் கார் மீது விழுந்து ஒருவர் பலி
x
தினத்தந்தி 5 Oct 2020 2:53 AM IST (Updated: 5 Oct 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

லாரியில் ஏற்றிச் செல்லப் பட்ட அட்டை பெட்டிகள் கார் மீது விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

தானே,

வசாயில் இருந்து தானே நோக்கி அட்டைபெட்டி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் தானே கோட்பந்தர் சாலையில் உள்ள வாக்பில் மேம்பாலத்தில் அந்த லாரி சென்றுகொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.

இதனால் அட்டைபெட்டிகளின் பாரம் தாங்காமல் லாரி ஒரு பக்கமாக சரிந்து மேம்பாலத்தில் கவிழ்ந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் லாரியில் இருந்து கிழே குதித்து உயிர்தப்பினார்.

ஒருவர் பலி

அந்த சம்யத்தில் லாரியில் இருந்த அட்டைபெட்டிகள் மேம்பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்த காரின் மீது மொத்தமாக விழுந்து அமுக்கியது. இதில், கார் அப்பளம்போல நொருங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரையும் காருக்குள் இருந்து மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், அவர்களில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்தவர் பெயர் பிரசாந்த் தேவகொண்டா(வயது38) என்பது தெரியவந்தது. பலியானவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story