பெங்களூருவில் மாற்ற முயற்சி ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி பறிமுதல் 2 பேர் கைது
பெங்களூருவில் மாற்றுவதற்கு முயன்ற ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுல்தான் பாளையா அருகே புவனேஷ்வரிநகரில் வசித்து வரும் முதாசிர் நசீர் (வயது 32) என்பவருடைய வீட்டில் ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் ரத்து செய்யப்பட்ட பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முதாசிர் நசீரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ரகுமான் என்பவரிடம் இருந்து பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கியதாகவும், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால், கமிஷன் தருவதாக ரகுமான் கூறியதாகவும், இதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும் முதாசிர் நசீர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் நாகவாரா அருகே வீரண்ணா பாளையாவில் வசிக்கும் சேக் துபல் அலி (25) என்பவரும் ரகுமானிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கியது தெரியவந்தது.
ரூ.1 கோடி பறிமுதல்
இதையடுத்து, அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சேக் துபல் அலியின் வீட்டிலும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சேக் துபல் அலியையும் போலீசார் கைது செய்தார்கள். அவரது வீட்டில் இருந்து ரூ.20 லட்சமும், முதாசிர் நசீர் வீட்டில் இருந்து ரூ.80 லட்சத்திற்கு பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி சிக்கி இருந்தது.
இதுகுறித்து கைதான முதாசிர் நசீர், சேக் துபல் அலி ஆகிய 2 பேர் மீதும் ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரகுமானை போலீசார் தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story