பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமனம்: மந்திரி சி.டி.ரவி திடீர் ராஜினாமா எடியூரப்பாவை சந்தித்து கடிதம் வழங்கினார்
பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து மந்திரி பதவியை சி.டி.ரவி நேற்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேரில் வழங்கினார்.
பெங்களூரு,
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சி.டி.ரவி. சிக்கமகளூரு (மாவட்டம்) தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. கட்சி மேலிடம் உத்தரவிட்டால் மந்திரி பதவியை ராஜினாமா செய்து முதல்-மந்திரியிடம் கடிதம் கொடுப்பேன் என்று சி.டி.ரவி கூறினார்.
இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு அவர், “எங்கள் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற எழுதப்படாத விதிமுறை அமலில் உள்ளது. அதே போல் 75 வயதானவர்களுக்கு அதிகார அரசியலில் இருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது. இதையும் நாம் கவனிக்க வேண்டும்“ என்றார். இதன் மூலம் அவர் 78 வயதாகியும் முதல்-மந்திரி பதவியில் இருக்கும் எடியூரப்பா குறித்து அவர் மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
ஒருவருக்கு ஒரு பதவி
இதன் மூலம் மந்திரி பதவியில் நீடிக்க விரும்புவதை அவர் வெளிப்படுத்தினார். இதற்கிடையே மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறினார்.
இந்த நிலையில் மந்திரி சி.டி.ரவி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேரில் வழங்கியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து எடியூரப்பா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதுகுறித்து சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்து முதல்-மந்திரியிடம் கடிதம் கொடுத்துள்ளேன். நாளை (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். அங்கு பா.ஜனதா பொதுச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் நான் பங்கேற்கிறேன். அங்கு எனக்கு பொறுப்புகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
நம்பிக்கையை காப்பாற்றுவேன்
கட்சி எனக்கு என்ன பணிகளை ஒதுக்குகிறதோ அதை நான் மேற்கொள்வேன். கட்சி பணியா?, ஆட்சி அதிகாரமா? என்ற நிலை வரும்போது, நான் எப்போதும் கட்சி பணியையே தேர்ந்தெடுக்கிறேன். கட்சிக்கு என்னால் இயன்ற பணிகளை செய்வேன். என் மீது கட்சி மேலிடம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
தனது ராஜினாமா குறித்து சி.டி.ரவி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சாகும் மனிதரை யாரும் தடுக்க முடியாது. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சிறிது காலத்திற்கு துக்கத்தை கொடுக்கலாம். இறந்தவர் புதைக்கப்பட்ட மண்ணில் புல் முளைக்கிறது. புதிய வாழ்க்கையுடன் பூமி மீண்டும் கர்ப்பமாகிறது. இயற்கை எப்போதும் அறுவடை செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காலியிடங்களின் எண்ணிக்கை
மந்திரி பதவியை சி.டி.ரவி ராஜினாமா செய்ததின் மூலம் மந்திரிசபையில் காலியிடங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 4-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.டி.ரவிக்கு சுற்றுலா துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, தனக்கு வழங்கப்பட்ட அரசு காரை திருப்பி அனுப்பினார். கட்சி மேலிடத்தின் தலையீட்டை அடுத்து, அவர் அந்த துறையின் பொறுப்பை ஏற்றார். இதற்கு முன்பு 2008-13-ம் ஆண்டு வரை பா.ஜனதா ஆட்சியில் சி.டி.ரவி பதவி ஏற்று ஓராண்டு காலத்திற்கு உயர்கல்வித்துறை பொறுப்பை நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதில் அவர் புகழ் பெற்றவர்.

Related Tags :
Next Story