‘பழங்குடியின மாணவ-மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது’ போலீசார் கண்காணிக்க, டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை
பழங்குடியின மாணவ- மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது என்றும், அதனை கண்காணித்து அவர்களை படிக்க வைக்க போலீசார் உதவ வேண்டும் என்றும் டி.ஐ.ஜி.முத்துசாமி அறிவுரை வழங்கினார்.
பெரும்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் தனிப்படை அமைத்து துப்புத்துலக்க வேண்டும். புகார் மனு மீதான விசாரணையை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
சம்பவம் நடந்த கிராமத்துக்கே போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும். எந்த மனுவாக இருந்தாலும், 15 நாட்களுக்கு மேல் விசாரிக்காமல் இருக்கக்கூடாது என்றார். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் டி.ஐ.ஜி. மரக்கன்றுகள் நட்டார்.
முன்னதாக தாண்டிக்குடி ஊராட்சிக்குட்பட்ட கடுகு தடிபுதூர் மலைக்கிராமத்துக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி சென்றார். அங்கு போலீஸ் துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கினார். அந்த கிராமத்தில் வசிக்கிற 40 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசும்போது, பழங்குடியின மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் கட்டாயம் மீண்டும் படிக்க வேண்டும்.
பாதியில் படிப்பை நிறுத்திய மாணவ-மாணவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து, அவர்கள் படிப்பை தொடர முடியாததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து படிக்க போலீசார் உதவ வேண்டும். பழங்குடியின மக்களின் திறன் மேம்பாட்டுக்காக விளையாட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கு கலைநிகழ்ச்சி போன்றவை நடத்தப்படும் என்றார்.
பழங்குடியின மக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று டி.ஐ.ஜி.யிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவர்களை சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து செல்ல போலீஸ்காரர் ஒருவரை நியமனம் செய்ய தாண்டிக்குடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிப்பை பாதியில் நிறுத்தி மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கி, மீண்டும் கல்வியை தொடர புத்தகம், எழுது பொருட்களை வழங்க போலீஸ் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துசாமி உறுதி அளிதார். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story