கொரோனாவால் இறந்தவர் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு - களியக்காவிளை அருகே பரபரப்பு
களியக்காவிளை அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அரிவாளால் வெட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் (வயது 60), தொழிலாளி. இவருடைய மகன் சிபின் (23). குட்டப்பன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா இருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து குட்டப்பனை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்து, அவரது வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்ய சுகாதார துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து குட்டப்பன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்சை அழகப்பபுரத்தை சேர்ந்த பொன் ஜோசப் (35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அங்கு வந்த சிபின், ஆம்புலன்சில் ஏற்றி சென்றதால் தான் என் தந்தை இறந்து விட்டார் என்று கூறி பொன் ஜோசப்பை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த சுகாதார துறை அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்து விட்டு சென்று விட்டார்.
இதில் பொன் ஜோசப் தலையில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து இறந்த குட்டப்பன் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. இதை அறிந்த பா.ஜனதா கட்சியினர் அங்கு வந்து உடலை அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபின் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story