மரக்காணம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. பாசறை ஆலோசனை கூட்டம் - அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்
மரக்காணம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
திண்டிவனம்,
மரக்காணம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் மானூர், பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கீழ்எடையாளம் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வக்கீல் ஜெயபிரகாஷ், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியல், பொது வாழ்கையில் உரிய இடத்தை, பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் 2008-2009 -ம் ஆண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை முதன் முதலில் ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார்.
அதன்படி ஊர் ஊராக சென்று கிளைகளை அமைத்து, லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து விழுப்புரத்தில் பெரிய அளவில் மாநாடு நடத்தினோம். இந்த பாசறை அமைப்பு ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில் இருந்தது. மேலும் இந்த அமைப்பில் இருந்தவர்கள் கட்சியில் பெரிய பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.
2011 சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம் இந்த பாசறையின் உழைப்புதான். இதனால் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து மீண்டும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை முழுமூச்சுடன் முடுக்கி விட்டுள்ளனர். அடுத்து வரும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற நல்லநோக்கத்துடன் தமிழ் நாடு முழுவதும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. எனவே அ.தி.மு.க.வில் இணைந்துள்ள இளைஞர் மற்றும் இளம் பெண்கள் முழு மனதோடு, அர்ப்பணிப்போடு தேர்தல் பணியை செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எண்டியூர் விநாயகம், ஜக்காம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் தென்பசியார் ராம்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரவேல்(கீழ்அருங்குணம்), முருகன்(கீழ்சித்தாமூர்), வக்கீல் அய்யனார் (மொளசூர்), மானூர்-அண்ணாநகர் கிளை கழக செயலாளர் ரீத்து என்கிற நரேந்திரபிரபு, மேலவை பிரதிநிதி கோபாலபுரம் கோமதியவராஜா, அரசு ஒப்பந்ததாரர் தீபம்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஜெயகிருஷ்ணன் (வட ஆலப்பாக்கம்), செல்வராஜ்(குன்னபாக்கம்), ராமலிங்கம்(எண்டியூர்), பாசறை இணை செயலாளர் ராஜா என்கிற சக்கரவர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் கோவடி தனுசு, கிளை செயலாளர்கள் யோகநாதன், குப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாணிக்கம், நிர்வாகி சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story