வழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? சஞ்சய் ராவத் பதில்
வழிபாட்டு தலங்களை திறப்பது எப்போது என்பதற்கு சஞ்சய் ராவத் பதில் அளித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முதல் உணவகங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. எனினும் மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு தரப்பினர் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பதிலளித்து கூறியதாவது:-
முதல்-மந்திரி விரைவில் முடிவு எடுப்பார்
ஆரம்பம் முதலே முதல்-மந்திரி படிப்படியாக தான் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். உணவகங்களை திறக்கும் போது 50 சதவீத வாடிக்கையாளர்களை தான் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால் கோவில்களை திறக்கும் போது அது சாத்தியமில்லை.
முதல்-மந்திரி எல்லா மத பிரதிநிதிகளிடமும் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி விரைவில் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல பீகார் சட்ட மன்ற தேர்தலில் 30 முதல் 40 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சஞ்சய் ராவத் கூறினார்.

Related Tags :
Next Story