தஞ்சையில், கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 9 பேர் கைது - 5½ கிலோ கஞ்சா பறிமுதல்


தஞ்சையில், கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 9 பேர் கைது - 5½ கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2020 10:45 PM GMT (Updated: 6 Oct 2020 12:53 AM GMT)

தஞ்சையில், கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் பேரில் தஞ்சை கிழக்கு, மேற்கு, தாலுகா, தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது தஞ்சை மகர்நோன்புச்சாவடி விஜய மண்டபத்தெருவில் 1¼ கிலோவும், கரந்தை தற்காலிக பஸ் நிலையத்தில் அரை கிலோவும், மாரியம்மன் கோவில் பகுதியில் 1.100 கிலோவும், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய பகுதியில் 2 கிலோ 700 கிராமும் என மொத்தம் 5 கிலோ 550 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீசார் விஜய மண்டபத்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது 47), அவருடைய மகன் கார்த்தி (20) ஆகியோரையும், மேற்கு போலீசார் கீழவாசல் டவுன் கரம்பையை சேர்ந்த பிரகாஷ் (20) என்பவரையும் கைது செய்தனர்.

தஞ்சை தாலுகா போலீசார், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜா(29), நாகராஜ்(40) ஆகியோரையும், தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்த அம்சு(53), சித்ரா(29), வினோத்குமார்(34), புவனேஸ்வரி(27) ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story