உடன்குடி வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


உடன்குடி வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 Oct 2020 11:50 PM IST (Updated: 6 Oct 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய வார சந்தையாக உடன்குடி வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தை திங்கட்கிழமை தோறும் செயல்படும். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக வாரச்சந்தை மூடப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உடன்குடி வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி உடன்குடி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாபு நேற்று காலையில் வாரச்சந்தையை திறந்து வைத்தார்.

மகிழ்ச்சி

6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை திறக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இங்குள்ள காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகை பொருட்கள் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், பழம், கருப்புக்கட்டி போன்ற ஏராளமான விவசாய பொருட்களை இங்கு கொண்டு வந்துவிற்பனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story