யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவன முன்னாள் அதிகாரிகள் கைது
யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவன முன்னாள் அதிகாரிகள் 2 பேரை கைது செய்து உள்ளனர்.
மும்பை,
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் லஞ்சம் வாங்கி கொண்டு பல நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே ராணா கபூர் மற்றும் டி.எச்.எப்.எல். நிறுவன நிறுவனர்கள் கபில் வாதவான் மற்றும் தீரஜ் வாதவானை கைது செய்து இருந்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் பிரபல சுற்றுலா மற்றும் டிராவல்ஸ் நிறுவனமான காக்ஸ் அன்ட் கிங்சின் முன்னாள் அதிகாரிகள் அனில் கன்டேல்வால் மற்றும் நரேஷ் ஜெயினை கைது செய்து உள்ளனர். இதில் அனில் கன்டேல்வால் அந்த நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகவும், நரேஷ் ஜெயின் ஆடிட்டராக இருந்தவர் ஆவர். இவர்கள் யெஸ் வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகையை தங்களுக்கு சொந்தமான வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு மோசடி செய்துள்ளனர். மேலும் யெஸ் வங்கியில் கடன்பெற போலி ஆவணங்களை தாக்கல் செய்து இருப்பதும் தெரியவந்தது.
கைதான 2 பேரையும் அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு 2 பேரையும் 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Related Tags :
Next Story