மாவட்ட செய்திகள்

கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: தி.மு.க., எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்கு + "||" + Rally towards Kindi Governor's House: DMK, MP Case against 191 people, including Kanimozhi

கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: தி.மு.க., எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்கு

கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: தி.மு.க., எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்கு
உத்தரபிரதேச சம்பவத்துக்கு நீதி கேட்டு கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆலந்தூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நோக்கி நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது.


கிண்டி சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய பேரணியில், தி.மு.க. மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் திரண்டனர். இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கனிமொழி மீது வழக்கு

பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் தி.மு.க. மகளிரணி நடத்திய பேரணிக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி உள்பட 11 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பேரணி
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி சிலை அருகே கையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயற்சி
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. டெல்லி போராட்டம்: விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
4. வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி கலெக்டர் அரவிந்த் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
5. கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.